கோவையில் நியாயவிலை கடையிலிருந்து அரிசி கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார்!

கோவை: கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட இரண்டு நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் இருசக்கர வாகனத்தில் கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார் அளித்துள்ளது.

கோவை: கோவை சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட இரண்டு நியாய விலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகள் இருசக்கர வாகனத்தில் கடத்துவது தொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார் அளித்துள்ளது.

கோவை மாவட்ட சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலையில் பத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இதில் சில கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.



இதனை தொடர்ந்து, அரிசி கடத்தல் தொடர்பாக புகைப்படங்களுடன் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளது. இந்த புகாரினை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு நிர்வாகி லோகு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது;-

கோவை சிங்காநல்லூரில் உள்ள கடைகளில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்கள் ஒரே கடையில் பல வருடங்களாகப் பணி புரிவதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் இருந்தாலும் வழங்குவதில்லை. அதேபோல குடும்ப அட்டையை பதிவு செய்யாமல் மின்தடை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வெளி நபர்களுக்கு பொருட்கள் வழங்குவது அதிகரிக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில், இன்று காலை சுமார் 11.20 மணி அளவில் பீளமேடு ஹோப் காலேஜ் தாஷ்கண்ட் வீதியில் உள்ள கடை எண் 58 மற்றும் 91 கடைகளில் அரிசி கடத்தப்படுவதாக புகைப்படம் எடுத்த பொதுமக்கள் எங்கள் அமைப்பிற்கு அனுப்பினர்.

மேலும் இந்த கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் வழங்கிய நியாயவிலைக்கடை பொருட்களை மூட்டை மூட்டையாக கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவ்வமைப்பின் நிர்வாகி லோகு கூறும்போது;-

இதுபோன்ற சமூக விரோத செயல்களால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஆகவே, மேற்குறிப்பிட்ட அரிசி கடத்தல் தொடர்பாக கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...