தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி காலமானார்!

கோவை: தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி இன்று காலமானார்.

கோவை: தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானி இன்று காலமானார். அவருக்கு வயது 85.

கோவையில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் ஞானி. இவரது இயற்பெயர் கி.பழனிச்சாமி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகாலம் பணியாற்றியவர். மேலும் மார்க்சிய நெறியில் தமிழ் இலக்கியம் குறித்து 30 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஆய்வில் ஈடுபட்டவர்.

தமிழ் மார்க்சியம் என்பதன் மூல முன்னோடி கோவை ஞானி அவர்கள் 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்களை படைத்திருக்கிறார். கோவை ஞானியின் தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் விளக்கு விருது (1998), கனடா தமிழிலக்கியத் தோட்ட 'இயல்' விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய 'பரிதிமாற் கலைஞர்' விருது (2013) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

பன்முகத் தன்மை வாய்ந்த கோவை ஞானி இறுதி மூச்சுவரை தமிழ் ஆய்வு உலகில் இயங்கி வந்த மிகப் பெரிய ஆளுமை. முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் கோவையில் இன்று முற்பகல் கோவை ஞானி காலமானார். அவரது மறைவுக்கு ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இறுதி மரியாதை செலுத்தினர்.

இவரது இயற்பெயர் கி.பழனிச்சாமி புனை பெயர் ஞானி. தமிழ்நாட்டில் கோவை வட்டாரத்தில் சோமனூரில் 1-7-1935 இல் பிறந்தார். பெற்றோர் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் உடன் பிறந்தவர் எழுவர். கிராமப்புற சூழலில் கல்வி கற்றார். கோவையிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியம் கற்றார். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்த இவர் விருப்ப ஓய்வு பெற்றார். 1988 முதல் உடல்நலம் குறைந்த நிலையிலும் தொடர்ந்து உதவியாளர் துணையோடு படித்தும் எழுதியும் இயங்கி வந்தார்.

தமிழோடுதான் தனக்கு வாழ்வு என்பதில் நிறை வாழ்வு வாழ்ந்தவர். இவரது துணைவியார் மு. இந்திராணி உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் 75வது வயதில், 5-9-2012 அன்று புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். இருவரும் கலை உணர்வில் தேர்ந்தவர்கள். ஒளிப்படக் கலை தொழில் செய்பவர்கள். மார்க்சிய நோக்கோடு பழந்தமிழ் இலக்கியத்தையும் தற்கால இலக்கியத்தையும் சிறந்த முறையில் ஆய்வுசெய்து 25-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதினார். மார்க்சியம் குறித்தும் சமயம் மெய்யியல் குறித்தும் நூல்களை வெளியிட்டார்.

மேலும், தொடக்கம் முதலே தமிழ்ச் சிற்றிதழ் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த இவர், மார்க்சிய இதழாகிய (புதிய தலைமுறையோடும் (1968-70) வானம்பாடி இயக்கத்தோடும் தொடர்பு கொண்டிருந்தார். பின்னர் மார்க்சியத்தின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் முறையில் பரிமாணம் (1979-83), நிகழ் (1988-96), தமிழ்நேயம் (1998-2012) ஆகிய சிற்றிதழ்களை நண்பர்கள் ஒத்துழைப்போடு இவர் வெளியிட்டார்.

சி.சு. செல்லப்பா, க.நா.சு. சிட்டி,லா.சா.ரா. முதலிய மூதறிஞர்களோடும் அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர இராமசாமி, வெங்கட் சாமிநாதன், பிரமிள், பொன்னீலன், ஜெயமோகன் முதலிய தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களோடும் நல்லுறவு கொண்டிருந்தார். எஸ்.என்.நாகராசன், எஸ்.வி. இராசதுரை, புலவர் ஆதி முதலியவர்களோடு கூடி மார்க்சியம் கற்றார். தமிழின் முதுபெரும் எழுத்தாளரும் ஆய்வறிஞருமான கோவை ஞானியின் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...