கோவை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து பொள்ளாச்சியில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாத பொதுமக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டு இருந்தார். இதனடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன் மகாலிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்.
அதேபோல, கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் குமரன் நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதேபோல் பொள்ளாச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் தமிழ்மணி தலைமையில் மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
குள்ளக்காபாளையத்தில் மாநில நெசவாளர் அணி செயலாளர் கே.எம். நாகராஜன் தனது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தமிழக அரசு கொரோனா காலத்தில் அதிக மின் கட்டணம் வசூலித்து வருவதால் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பொதுமக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.