பருவமழையால் பவானி ஆற்றுக்கு கலங்கலாக வரும் தண்ணீர்..! காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களை தடுக்க நீரை காய்ச்சி குடிக்குமாறு அறிவுறுத்தல்!

கோவை: மேட்டுப்பாளையத்தில் பருவமழையால் பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீர் கலங்கலாக வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களை தடுக்க தண்ணீரினை காய்ச்சி குடிக்க நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பருவமழையால் பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீர் கலங்கலாக வருவதால் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களை தடுக்க தண்ணீரினை காய்ச்சி குடிக்க நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஓடும் வற்றாத ஜீவநதியான பவானி ஆற்றுக்கு தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக நீர் வரத்தானது அதிகரிக்க துவங்கியுள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள், திருப்பூர் மாநகராட்சிக்கு என 20க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் இதனை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது

நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து எஸ்.எம் நகர் அருகே உள்ள சாமண்ண வாட்டர் ஹவுஸ் என்ற இடத்தில் சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள காடுகளில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க துவக்கியுள்ளது.



இதன் காரணமாக பவானி ஆற்றில் புதுத்தண்ணீரானது செந்நிறத்தில் ஓடிவருகிறது. எனவே இந்த தண்ணீரினை நகராட்சி மூலம் சுத்திகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டாலும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தண்ணீரினை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

கொரானோ வைரஸ் தாக்குதல் மேட்டுப்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளை தவிர்க்க பொதுமக்கள் கட்டாயம் தண்ணீரினை காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...