கோவை தடாகம் அருகே வீட்டினுள் ஆட்கள் இருக்கும் பொழுதே 17 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் வீட்டின் உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை தடாகம் காவல் எல்லையில் வீட்டின் உள்ளே புகுந்து 17 பவுன் தங்க நகை மற்றும் 55 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சின்னதடகம் அருகே உள்ள 24 வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கதிரவன்(34). இவர் ஆனைகட்டி அருகே உள்ள நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், அவரும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கடந்த வாரம் திங்கட்கிழமை வழக்கம் போல அவர்களது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 17 பவுன் தங்க நகை 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, அளித்த புகாரின் பேரில் நேற்று தடாகம் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தடாகம் பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...