மக்களை பீதிக்குள்ளாக்கும் மனநோயிலிருந்து ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் - அமைச்சர் எஸ்பி வேலுமணி

கோவை: மக்களை பயமுறுத்தி பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை: மக்களை பயமுறுத்தி பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் விடுத்த அறிக்கையில், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களது வழிகாட்டுதலில் அமைச்சர்களும் அதிகாரிகளும் அனைத்து முன்களப் பணியாளர்களோடு இணைந்து முன்களப் பணியாளர்களாகவே களத்தில் தைரியமாக நின்று செயல்பட்டு அயராது பாடுபட்டு சென்னையில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளனர்.

பெங்களூரு, மும்பை, புதுடில்லி நகரங்கள் முழுவதுமாக இன்னமும் முடங்கியுள்ள நிலையில், நாட்டிலேயே அதிக பரிசோதனைகளையும் காய்ச்சல் முகாம்களையும் வீடு வீடாக, வீதி வீதியாக நடத்திய நகராக திகழும் சென்னையை பெருமையுடன் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் சூழலில், நோய்த்தொற்று விகிதத்தை அரும்பாடுபட்டு 9.12% என்ற ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டு வந்து சென்னையின் எட்டு மண்டலங்களில் முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்து, மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையை மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மாநகராட்சி சாதித்து காட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை வைத்து மக்களை பயமுறுத்தி அறிக்கை அரசியல் செய்யும் முழுநேர மலிவு அரசியல்வாதியாகவே திகழும் நீங்கள், அரசின் முயற்சிகளை பாராட்டாவிடினும், தலைநகர் சென்னையை சீனாவுக்கு இணையாக உருவகப்படுத்தி தொடர்ந்து அவமதித்து சென்னை வாழ் மக்களை மீண்டும் மீண்டும் பயத்திலும், பீதியிலும் வைத்திருப்பது தான் எதிர்க்கட்சி் தலைவரான உங்களது ஒரே குறிக்கோளா?

அரசை விடுங்கள், மீண்டு வரும் சென்னை மக்களின் நம்பிக்கையை மனதார பாராட்டுங்கள். சென்னையின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கை புள்ளிவிரங்களை உங்கள் அறப்போர் அறிவுக்கண் கொண்டு பாருங்கள். மக்களை பயமுறுத்தி பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு விரைவில் குணமடையுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...