கோவையில் தட்டி கிளப்பிய பருவ மழை; ஒரே நாளில் 602 மிமீ மழை பதிவு

கோவையில் தட்டி கிளப்பிய பருவ மழை; ஒரே நாளில் 602 மிமீ மழை பதிவு

கோவை: கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 602 மிமீ மழை பதிவாகியுள்ளது.

கோவையில் நேற்று மதியம் முதல் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. கோவையை சுற்றியுள்ள பல பகுதிகளில் -- 

வால்பாறை, சேத்துமடை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, செட்டிபாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை பெய்ய ஆரம்பித்த மழை விட்டுவிட்டு, இன்று அதிகாலை வரை பெய்துள்ளது.

இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கிய படு உள்ளது. குறிப்பாக, புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடியது.

தீவிரம் அடைந்துள்ள தென்மேற்கு பருமழை காரணமாக நொய்யல் ஆறு, கோவை குற்றாலம் ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 

நேற்று கோவையில் பெய்த மழை அளவு விவரம்: ( மி.மீ) 

கோவை விமான நிலையம்-14.7 

அன்னூர் 4 

மேட்டுப்பாளையம்-33.2 

சிங்கோனா - 52 

சின்னகல்லார்-110 

வால்பாறை பி.ஏ.பி.-56

வால்பாறை தாலுகா-55சோலையாறு-66 

ஆழியாறு 54.6 

பொள்ளாச்சி 41

சூலூர்-55 

கோவை தெற்கு-27 பெரியநாயக்கன்பாளையம்-22.6 வேளாண்மை பல்லைக்கழகம்- 11.5 மி.மீ, என ஒரே நாளில் 602.6 மிமீ மழை பெய்துள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...