தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை அமீதுவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்த்து!

கோவை: தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை அமீதுவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோவை: தொழிலாளர் வீட்டு வசதி குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வால்பாறை அமீதுவுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஒரு அங்கமான தொழிலாளர் வீட்டு வசதி குழுவிற்கு தமிழக அரசால் புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவின் ஒரு உறுப்பினராக வால்பாறை தோட்டத் தொழிலாளர் சங்கத்தலைவரும் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வால்பாறை வீ.அமீது அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் புதுக்காடு, ஷேக்கல்முடி, முருகாளி, சோலையார் டேம், சேடல் டேம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வால்பாறை வீ.அமீதுவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .

இவர் வால்பாறை பகுதிக்கு இன்னும் சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்று அனைத்து பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் நகர துணைச் செயலாளர் பொன் கணேஷ், பாசறை மாவட்ட செயலாளர் சலாவுதீன், ஜார்ஜ், சசிகுமார் , மணிகண்டன், சோலையார் டேம் பாலமுருகன், சுந்தரம், கீதா, மூக்கம்மாள், செல்வி, கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...