பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார்

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர்.

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புகார் அளித்தனர். 



கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 17ம் தேதி பெரியார் சிலை மீது காவி வண்ணம் வீசி சென்றதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத் சேனா அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.



இந்நிலையில், 18ம் தேதி கோவை ஐந்து முக்கு பகுதியில் உள்ள மாகாளி அம்மன் கோவில், ரயில் நிலையம் மற்றும் சங்கமேஸ்வரர், நல்லாம்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஜேந்திரன் என்பவரை கைது செய்தனர்.

இதனிடையே, கோவையில் இந்து கோவில்களை தபெதிகவினர் சேதப்படுத்தியதாக தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

இந்த நிலையில், இது திட்டமிட்டு தபெதிக மீதும் அதன் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மீதும் அவதூறு கிளப்பும் செயல் எனவும் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

இந்து கோவில்கள் தாக்குதல் அவமதிப்பு சம்பவத்தில் உண்மைக்கு புறம்பாக மக்கள் மத்தியில் அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டிய அவர்கள், திட்டமிட்டு இருவேறு பிரிவினருடன் கலகத்தை ஏற்படுத்தல், பொது மக்களிடம் அவதூறு பரப்பு செயலில் ஈடுபட்ட சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

தமிழகம் முழுவதும் மனு அளிக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...