கோவை: கோவை மக்களின் நலன் கருதி ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் இன்று முதல் மூடப்படுவதாகவும் கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் திறக்கப்படும் என அதன் உரிமையாளர் சிவ கணேஷ் அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மக்களின் நலன் கருதி ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் இன்று முதல் மூடப்படுவதாகவும் கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் திறக்கப்படும் என அதன் உரிமையாளர் சிவ கணேஷ் அறிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகின்றன. கிராஸ் கட் சாலையில் ஏராளமான ஜவுளி நிறுவனங்களும், வணிக கடைகளும் உள்ளது. இதில் காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் உரிமையாளர் சிவ கணேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கொரோனா தொற்று பரவலாக உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இன்று முதல் இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை கடையை தற்காலிகமாக மூடி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்திற்கும் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் அனைத்து தரப்பினருக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்தார்.
இது தங்களின் தன்னிச்சையான முடிவு எனவும் சங்கத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை இல்லை என்றவர், தங்களது நிறுவனத்தில் 600 ஆட்கள் பணியாற்றுகின்றனர் அவர்கள் அனைவருக்கும் கடந்த ஊரடங்கு காலத்தின் போது வழங்கியது போல் ஊதியம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.