கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு வேலை நிமித்தமாக கொல்கத்தாவிலிருந்து வந்த பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

வால்பாறையில் உள்ள வாட்டர் பால் (Water Fall) தேயிலை தோட்டத்தில், உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு இயந்திர பணிகளுக்காக நான்கு தினங்களுக்கு முன் கொல்கத்தாவிலிருந்து ஒரு பொறியாளர் வந்துள்ளார்.

அவர் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்த நிலையில், தகவல் கிடைக்கப்பெற்று அங்கு வந்த சுகாதாரத்துறையினர் அவரை தனிமைப்படுத்தி அவரிடம் இருந்து சளி மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் தனி ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்துச் சென்று கோவை இ.எஸ்.ஐ மருத்துவமணையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்த சமையல்காரர், தோட்டக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நகராட்சி கொரோனா தடுப்பு பிரிவினர் அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து. எஸ்டேட் விருந்தினர் மாளிகையை பூட்டி வைத்தனர்.
அப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.