தென்மேற்கு பருவமழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அணையின் நீர்மட்டம் 86 அடியாக உயர்வு!

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.

கோவை: மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 86 அடியாக உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையோரம் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள பில்லூர் அணையானது 100 அடி கொள்ளளவு கொண்டது.

கடந்த நான்கு மாதங்களாக அணைக்கான நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கேரளா மற்றும் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அணையின் நீர் மட்டம் கடந்த ஒரு வாரத்தில் நான்கு அடி உயர்ந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் தற்போதைய நீர்மட்டம் 86 அடியாக உள்ளது. அதேபோல, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக உள்ளது. தண்ணீர் திறப்பு என்பது மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.



மேலும், பவானி ஆற்றுக்கான நீர்வரத்தும் உயர்ந்து வருகிறது. இதனால் பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரினை ஆதாரமாக கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...