கேரளாவில் இருந்து இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனம் கோவையில் பறிமுதல் - போலீசார் விசாரணை

கோவை: கோவை கந்தேகவுண்டன் சாவடியில் இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை கந்தேகவுண்டன் சாவடியில் இ-பாஸ் மூலம் பயணிகளை ஏற்றிச் சென்று மோசடியில் ஈடுபட்ட வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக்கரை காவல் ஆய்வாளர் அளித்த தகவலின் பேரில் எட்டிமடை போலீசார் கோவை கந்தேகவுண்டன் சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாநகருக்குள் வந்த KL-07-CS 9840 பிரதர்ஸ் ஹாலிடேஸ் என்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ஹாலிடேஸ் பிரதர்ஸ் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தினர் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் கொச்சியில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல தங்களை அணுகலாம் என பதிவிட்டு இருந்து உள்ளனர்.

கேரளாவில் இருந்து கோவை மார்கமாக இந்த வாகனம் செல்ல அனுமதி வாங்கப்பட்ட நிலையில், விதிமுறைகளுக்கு மாறாக பாலக்காடு, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிகப்படியான பணம் வசூல் செய்து சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றி சென்று வந்துள்ளது தெரியவந்தது.



இதனையடுத்து, பேருந்தை பறிமுதல் செய்த போலீசார், டிராவல்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் முஹம்மது ஷபத் (30) என்பவரை பிடித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...