கோவை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி!

கோவை: கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை: கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி துறை, காவல்துறை என அனைத்து துறைகளும் இணைந்து தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, போலீசார் ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவையில் சில காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி காவலர்கள் பாதிக்கப்படுவதால் காவல் நிலையங்களும் மூடப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக்கரை, உக்கடம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் நிலையங்கள் மூடப்பட்டது.

இந்த நிலையில், கோவை கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...