கோவையில் இந்து கோவில்களின் மீது தாக்குதல்; 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் போராட்டம் - இந்து முன்னணியினர்

கோவை: கோவையில் இந்து கோவில்களின் மீது மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இந்து கோவில்களின் மீது மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில்நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில், நல்லாம் பாளையத்திலுள்ள செல்வ விநாயகர் கோவில் ஆகிய கோவில்களிலும் தீ வைத்துள்ளனர். இதற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவில்களின் முன்பு ஒன்று கூடினர். 

இதை தொடர்ந்து, டவுன்ஹால் பகுதியில் ஒன்றுகூடிய இந்து அமைப்பினர் கோவில்களில் சமூக விரோதிகள் தீ வைத்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்துக்களின் மனம் புண்பட்டு உள்ளதெனவும் தொடர்ந்து கோவையில் இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து இந்து முன்னணியின் நிர்வாகி குணா கூறும்போது;-

இந்து கோயில்களின் மீது நடைபெறும் தாக்குதல்களில் கைது செய்தவர்களை போலீசார் மனநோயாளிகள் என தெரிவிக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்றார். 

மேலும், போலீசார் குற்றவாளிகளை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும். அதற்கான அவகாசத்தை தருகிறோம். இல்லையென்றால் இந்துக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...