கோவை: கோவை உக்கடம் அருகே புர்கா வியாபாரி போல் நடித்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை உக்கடம் அன்புநகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜாம். இவரது மனைவி இஷானா பர்வீன். நிஜாம் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு நிஜாம் வீட்டின் அருகே புர்கா ( இஸ்லாம் பெண்கள் அணியும் ஆடை) விற்பனை செய்ய ஒருவர் வந்துள்ளார்.
நிஜாமின் மனைவி இஷானா பர்வீனிடம் பேச்சு கொடுத்த அந்த நபர் திடீரென அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட இஷானா தங்க நகையினை கையில் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த மர்ம நபர் இஷானாவை கடுமையாக தாக்கி உள்ளார். இதனிடையே அங்கிருந்தவர்கள் ஓடி வரவே நிஜாமின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் பின் வாசல் வழியாக தப்பியோடினார்.
இதனை தொடர்ந்து, காயமடைந்த இஷானா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.