கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய காதலன்..! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை: கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் ஆறுமுக கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (48, பெயர் மாற்றப்பட்டுள்ளது ) பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் கவிதா (18, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவரது வீட்டின் அருகில் வசிக்கும் ரித்தீஷ் மோட்டர் வைண்டிங் பணி செய்து வருகிறார். இவரும் கவிதாவும் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரையும் அழைத்துப் பேசி கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து, கவிதா ரத்தீஸுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் கவிதா வீட்டுக்கு சென்ற ரிதீஸ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு மாணவி மறுக்கவே ஆத்திரமடைந்த ரிதீஸ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கவிதாவை நான்கு ஐந்து முறை குத்தியதால் கவிதா வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.

மகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த குமாரையும் கத்தியால் குத்திய ரதீஸ், உன்னால் தான் என் காதல் பறிபோனது என ஆத்திரத்துடன் என கூறியுள்ளார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கவிதாவிற்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கவிதா இன்று உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ரதீசை தேடி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்னை கத்தியால் காதலன் குத்தி கொலை செய்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...