கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து - போலீசார் விசாரணை!

கோவை: கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலின் கூரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை டவுன்ஹால் ஐந்து முக்கு பகுதியிலுள்ள மாகாளியம்மன் கோவிலின் கூரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை டவுன்ஹால் ஃபைவ் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது அருள் மிகு மாகாளியம்மன் கோயில். இந்த கோவிலின் வாசலில் உள்ள மேல் கூரை மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.



இந்த நிலையில், இன்று அதிகாலை இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, தகவலறிந்து வந்த உக்கடம் போலீசார் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதில், கோவிலின் கூரையில் மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



சுந்தராபுரம் பகுதியில் நேற்று பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும் முன், கோவில் முகப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோல, கோவை இரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் மற்றும் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...