கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரசீபுரம் கிராமத்தில் அருகே உள்ள வனப்பகுதிக்கு செல்லும் வழியில் இன்று ஒருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.

கோவை நரசீபுரம் கிராமம் அருகே ஜவ்காடு வனப்பகுதியில், கால்நடை மேய்ச்சலுக்கு சென்ற நபர், அங்கு ஒரு ஆண் சடலம்
கிடப்பதை பார்த்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர் உடனே, இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், எலும்புகள் நொறுங்கிய நிலையில் சடலமாக கிடந்த 40 வயது மதிக்கதக்க நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த நபர் காட்டு யானை தாக்கி இறந்தது தெரியவந்தது. இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.