கோவை: கொரோனா தொற்று காரணமாக, கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தங்க நகை பட்டறை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டறைகள் செயல்படடால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்வபுரம், தெலுங்கு பாளையம், சலீவன் வீதி, டவுன் ஹால், ராஜ வீதி போன்ற பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேலான நகை பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், செல்வபுரம் பகுதியில் 120 இக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், பெருவாரியாக மக்கள் பட்டறை தொழிலில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் என தெரியவந்ததை அடுத்து பட்டறைகள் இயங்க தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.83 கருப்பகவுண்டர் வீதியில் அரசின் உத்தரவினை பின்பற்றாமல் இரவு நேரங்களில் ரகசியமாக நகைப்பட்டறை ஒன்று.இயங்கி வருவதாக மாநகராட்சிக்கு தகவல் கிடைக்க பெற்றது.
இதையடுத்து, நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் உத்தரவின்படி, மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட பறக்கும் படையினர் அந்த பட்டறைக்கு சீல் வைத்தனர்.