நீலகிரி: ஊட்டி அருகே கொரோனா பரவலை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி: ஊட்டி அருகே கொரோனா பரவலை கண்காணிக்க தவறிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த மாதம் அரசு அறிவித்த தளர்வுகள் காரணமாக பொதுமக்கள் தேவையற்ற பயணங்கள், விழாக்களுக்கு சென்று வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 320 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சில தினங்களுக்கு முன் ஊட்டி அருகே உள்ள தங்காடு, ஓரநள்ளி பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சியில் தொற்று உள்ள ஒருவர் கலந்து கொண்டதால் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது. இவர்கள் மூலம் முள்ளிகூர், எப்பநாடு உட்பட்ட கிராம பகுதிகள் நோய்களை உருவாக்கும் கிளஸ்டர்களாக மாறியுள்ளன.
குறிப்பாக, 50 பேருக்கு மட்டுமே அனுமதி வாங்கி விட்டு 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். எனவே, இதனை கட்டுப்படுத்த தவறிய கிராம நிர்வாக அலுவலர் ஐய்யப்பனை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.