திருப்பூர்: தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகம் சார்பாக நிறுவப்பட்ட தந்தை பெரியார் சிலை 16.07.2020 வியாழன் இரவு மர்ம நபர்களால் காவி சாயம் ஊற்றி அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் நடைபெற்றுவரும் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திருப்பூர் இரயில் நிலையம் எதிரிலுள்ள தியாகி திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் தனிநபர் இடைவெளியுடன் பங்கேற்று தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும், சமூகத்தில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்து வரும் இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.