நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பொதுமேலாளர் தமிழில் பேச வேண்டாம் என்று கூறியதை அடுத்து தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பொது மேலாளராக சஞ்சய் வாக்லூ என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை சிஎஃப்எல்யூ, டிஎப்எல்யூ, ஐஎன்டியூசி உட்பட தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து பேச பொதுமேலாளர் அறைக்கு சென்றனர்.

பின்னர் தங்களின் 20 அம்ச கோரிக்கைகள் குறித்து தமிழில் பேச ஆரம்பித்தனர். அப்போது, பொதுமேலாளர் இங்கு தமிழில் பேச வேண்டாம், ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் பேசுங்கள் என்று கூறி தமிழில் பேச கட்டுப்பாடு விடுத்ததற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சாலை வளாகத்தில் இனிவரும் காலத்தில் இதுபோன்று தமிழில் பேச கட்டுப்பாடு விதித்தால் அனைத்து அரசியல் கட்சியின் கூட்டம் கூட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று பாேராட்ட குழு ஒருங்கிணைப்பாளரும் சிஎப்எல்யூ தாெழிற்சங்க பொதுச் செயலாளருமான ஹரிஹரன் தெரிவித்தார்.