பல்லடம் ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்..! பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் தொடங்கி வைத்தார்!

திருப்பூர்: பல்லடம் ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: பல்லடம் ஒன்றியத்தில் குப்பைகளை சேகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களை பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சியில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 850 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் 148 தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் பல்லடம் வட்டாரத்திலுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

இந்த பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை கலையும் விதமாக பல்லடம் ஒன்றியத்திற்கு 44 பேட்டரி வாகனங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, முதல் கட்டமாக 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 25 பேட்டரி வாகனங்களை 62 லட்சத்தி 33 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கொடியசைத்து வாகனங்களை துவக்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி, கூட்டுறவு மார்க்கெட்டிங் தலைவர் சித்துராஜ், பல்லடம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...