கோவை ஒண்டிபுதூர் அருகே ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை திருடிச் சென்ற இளைஞர் - சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை!

கோவை: கோவை ஒண்டிபுதூர் அருகே ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை இளைஞர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஒண்டிபுதூர் அருகே ஆவின் பாலகத்தின் கல்லாப்பெட்டியை இளைஞர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிபுதூர் திருச்சி சாலையில் 24 மணி நேரம் செயல்படும் ஆவின் பாலகம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று இரவு பணியில் தேவதாஸ் என்ற 70 வயது முதியவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் யாரும் வராததின் காரணமாக சிறிது நேரம் கண் அயர்ந்துள்ளார்‌. அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் முதியவர் அயர்ந்து தூங்குவதைக் கண்டு, கடையின் உள்ளே நுழைந்து கல்லாபெட்டியில் இருந்த 4000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

மறுநாள் காலை பணம் காணாமல் போனது தெரியவர பாலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட போது, ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே லாவகமாக வந்து கல்லாப் பெட்டியை எடுத்துச் சென்றது கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் இதுகுறித்து கடையின் உரிமையாளர் கோபால கிருஷ்ணன், கல்லாப்பெட்டியில் சுமார் 4,000 ரூபாய் வரை இருந்ததாக கூறி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...