கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி அவமதித்த வழக்கில், பாரத் சேனா நிர்வாகி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி அவமதித்த வழக்கில், பாரத் சேனா நிர்வாகி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவிச்சாயம் ஊற்றி அவமதித்தனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கலகம் ஏற்படுத்துதல், விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில், போத்தனூர் காவல் நிலையத்தில் அருண்கிருஷ்ணன் சரண் அடைந்துள்ளார்.