கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவிச்சாயம் ஊற்றி அவமதித்தனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் த.பெ.தி.க, தி.வி.க, தி.க, விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுபோன்ற செயல்கள் நடப்பதை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதேபோல, சித்தாபுதூர் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...