கோவை: எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் பிரதமரின் விபத்து காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் காப்பீடு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்த ஒரு தனிப்பட்ட தலைவர்கள் அல்லது கட்சி அலுவலகத்தை தாக்குவது மற்றும் தனிப்பட்ட நபர்களை அவதூறு செய்வதில் பாஜகவிற்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.
அதேசமயம், ஒரு சார்பாக அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால் மக்களுக்கு இருக்கிற சில உணர்வுகளை வெளிப்படுத்த இம்மாதிரியான சில நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனவும் இதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
மேலும், மற்ற சிறுபான்மை மத விமர்சனம் வரும் போது ஓடி பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம் இந்து மதத்தை கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவும் இந்நிலை தொடர்ந்தால் மக்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த கடினமான சூழல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் எந்த ஒரு சிலை அவமதிப்பிலும் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை எனவும் கறுப்பர் கூட்டம் அமைப்பினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.