கோவை சுந்தரபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவத்தால் பரபரப்பு..!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் காவி சாயம் பூசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டதாக அந்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.

இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பெரியார் ஆதரவாளர்களுக்கும், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது. 

இதனையடுத்து, இன்று கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது. இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட, கோவையில் உள்ள மூன்று முக்கிய சிலைகளில் ஒன்றாக இருந்து இருக்கிறது. 

திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலையின் முன்பு பல்வேறு விதமான போராட்டங்களும், பகுத்தறிவு சார்ந்த சிந்தனை நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும்  நடைபெறுவது வழக்கம். 

இப்படியிருக்க, சமூக விரோதிகள் சிலர் பெரியாரின் சிலை மீது காவி சாயம் பூசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தகவல் அறிந்த பெரியார் தொண்டர்கள் இன்று காலை அந்த பகுதியில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 



இதைத் தொடர்ந்து, திராவிடர் கழகம், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலை முன்பு உடனடியாக சாயம் பூசிய நபரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் இது போன்ற ஒரு அசம்பாவிதம் எங்கு நடந்தாலும் மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் பெரியார் தொண்டர்கள் எச்சரித்தனர். 

பின்னர், குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு கலைந்து சென்றனர்.



திராவிட ஆதரவாளர்களில் பலரும் சமூக வலைத்தளங்களில் கருப்பர் கூட்டம் குழுவினரை கண்டித்திருந்தனர் என்பதும்,  மேலும், பாஜாக  வினர் பலர் முருக வழிபாடு செய்து தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...