பிளஸ் 2: கோவை மாநகராட்சி பள்ளிகள் 90.67 சதவீதம் தேர்ச்சி; ராமகிருஷ்ணாபுரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கோவை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 90.67 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவை மாநகராட்சி பள்ளிகளில் 90.67 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் 16 பள்ளிகள் உள்ளன. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை இந்தப் பள்ளிகளில் படிக்கும் 479 மாணவர்களும், 1160 மாணவிகளும் என மொத்தம் 1639 பேர் எழுதினர்.

அதில் 395 மாணவர்களும், 1091 மாணவிகளும் என மொத்தம் 1486 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், மாணவர்கள் 82.46 சதவீதமும், மாணவிகள் 94.5 சதவீதமும் என மொத்தம் 90.67 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக, ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 102 மாணவிகளில் அனைவரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...