திருப்பூர்: திருப்பூரில் இன்று ஒரு வயது ஆண் குழந்தை உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும், இன்று அதிகளவில் 10 வயதுக்குள்ளான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தாராபுரம் பெரியார் நகரில் 6 வயதான ஆண் குழந்தை, திருப்பூர் எஸ்.வி காலணியில் 5 வயது மற்றும் 3 வயதான பெண் குழந்தை, அதே போன்று திருப்பூர் செட்டிபாளையம் மற்றும் முனலூரில் 1 வயதான குழந்தை உட்பட மொத்தம் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், மாவட்டத்தின மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 342 லிருந்து 380 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் இன்று குழந்தைகளுக்கு அதிகளவில் தொற்று உறுதியாகியுள்ளதால் என்ன காரணம் என்பது பற்றியும் அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று ஒரு நாள் 602 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழு பேர் இன்று சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று முக கவசம் அணியாமல் பொது வெளியில் சென்ற 501 பேரிடம், ரூபாய் 67,350 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.