கோவை: மனிதனின் மரணத்திற்குப் பின் அவரது உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்வது, தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சத்தால் கேள்விக்குறியாகி வருகிறது.

மேலும், பல இடங்களில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் உடல்களை பெறுவதில் உறவினர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
சில இடங்களில், தொற்றால் இறந்த உடல்களுக்கு எவ்வித மரியாதையும் இன்றி சவக் குழிக்குள் தூக்கிப் போடும் அவல காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் (தமுமுக) கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதாக அரசிடம் அனுமதி பெற்றனர்.

இதைத் தொடர்ந்து, இன்று தமுமுகவினர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பலியான கோவை குனியமுத்தூர் அண்ணம்மனாய்கர் வீதியை சேர்ந்த 70 வயது முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
இத்துடன் தமிழ்நாடு முழுவதும் இதுவரை தமுமுக வினர் 277 உடல்கள் அடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கோவை மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் கூறும்போது:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொரோனவால் உயிரிழந்த எந்த சமுதாயத்தை சேர்ந்தவரையும் நல்லடக்கம் செய்ய தயார் நிலையில் உள்ளோம்.
இதற்காக எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

கோவையில் இன்றுடன் சேர்த்து 4 உடல்களை அடக்கம் செய்துள்ளோம் என தெரிவித்தார்.