கோவை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று 125 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

கோவையில் இந்த மாதம் தொடக்கம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மழை அடிவாரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரற்று அதிகரித்து வருவதால், சித்திரைச்சாவடி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் நேற்று சிங்கோனா, சின்ன கல்லார், வால்பாறை, சோலையாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான மழை பெய்துள்ளது.
அதே போல், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று 125 மிமீ மழை பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஜூலை மாதத்தில் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம், முழுக்கொள்ளளழை எட்ட அதிக வாய்ப்புள்ளது .
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், போதிய அளவு சீரான குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது", என்றார்.
கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:
விமானநிலையம்-2.7 மி.மீ., சிங்கோனா-32 மி.மீ., சின்னகல்லார்-48 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.-32 மி.மீ., வால்பாறை தாலுகா-31 மி.மீ., சோலையாறு-24 மி.மீ., ஆழியாறு-9 மி.மீ., பொள்ளாச்சி-12 மி.மீ
கோவை தெற்கு- 3 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம்-1.4 மி.மீ.,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-8.5 மி.மீ