கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கோவை: உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூலனூர், ஆவலப்பம்பட்டி, பூசாரிபட்டி பகுதிகளில் அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிட திறப்பு விழா, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அரசு கேபிள் டிவி நிறுவன தலைவரும் கால்நடைத்துறை அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இரண்டாவது முறையாக பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது, அதற்காக மாணவ - மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய பெருமக்களுக்கும், கல்வி துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
மேலும், கடந்த முறை முதலிடம் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மூலம் தனது சொந்த செலவில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. அதே போல் இந்த வருடமும் அரசு சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரையும் பாராட்டப்படும் என்று தெரிவித்தார்.