வால்பாறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை: சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறையில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக கடந்த நான்கு மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாததால், சுற்றுலா வாகன தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.



இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காப்பீட்டு தொகை உயர்வு, சாலை வரி உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் வால்பாறையில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலக கிளை முன் வால்பாறை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சந்தோஷ் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமையில் பொருளாளர் ரவி முருகன் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...