கோவை: கோவை துடியலூர் காவல்நிலையத்தை சேர்ந்த மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 5 காவலர்களும் சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 12ம் தேதி துடியலூர் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது கோவை துடியலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த மேலும் ஒரு காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், துடியலூர் காவல் நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.