ஆக்சிஜன் தொழிற்சாலையாக மாறியுள்ள கோவை வெள்ளலூர் குளம்...!

கோவை: சிங்காநல்லூர் குளத்திற்கு அடுத்ததாக பல்லுயிரி சூழ்நிலை மண்டலமாக மாறி இருக்கிறது நமது வெள்ளலூர் குளம்..!

கோவை: சிங்காநல்லூர் குளத்திற்கு அடுத்ததாக பல்லுயிரி சூழ்நிலை மண்டலமாக மாறி இருக்கிறது நமது வெள்ளலூர் குளம்..!

கடந்த 15 வருடங்களாக வறண்டு கிடந்த குளத்தை மீட்டு பல்லுயுரி சூழ்நிலை மண்டலமாக மாற்றி இருக்கிறார்கள் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள். 99 ஏக்கர் கொண்ட குளத்தை சீர்படுத்தி, மேடுகள் அமைத்து வளம்மிகு குளமாக மாற்றி இருக்கிறார்கள். குளத்தின் ஓரம் உள்ள நிலத்தில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்து உள்ளனர்.

வெள்ளலூர் என்றால் குப்பை கிடங்கு என்ற தான் சொல்லுவார்கள். இந்நிலையில், தற்போது அதை மாற்றி வெள்ளலூர் என்றால் பல்லுயுரி கொண்ட குளம் என்று மாறி உள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணமான கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சேர்ந்த மணிகண்டனிடம் பேசினோம்.

சிறு குழுவாக கோவையில் உள்ள நீர்நிலைகளை கண்டறிந்து சுத்தம் செய்தோம். அதன் பின்னர் நொய்யலின் வழித்தடத்தை சுத்தம் செய்தோம். இக்குளத்திற்கு சங்கிலிகருப்பன் அணைக்கட்டிலிருந்து பிரியும் நொய்யல் நீர் ராஜ வாய்க்கால் வழியாக 6.5 கிலோ மீட்டர் பயணம் செய்து வருகிறது. முதலில் இக்குளம் மற்றும் தண்ணீர் வரும் வாய்க்கால் முழுவதும் குப்பைகளாகவும் கழிவுகளாகவும் நிறைந்து இருந்தது.

பின் வெள்ளலூர் குளத்தை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். 6 நபர்கள் கொண்ட குழுவாக இருந்த இந்த அமைப்பு சமூக ஊடகத்தின் வாயிலாக 1500 நபர்கள் கொண்ட அமைப்பாக மாறி இருக்கிறது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை களப்பணி செய்கிறோம். குளத்தின் கரையோரம் உள்ள இடத்தை மூன்று வருடங்களுக்கு முன் மியாவாக்கி முறையில் மரங்களை நட்டு வளர்த்தோம். இன்று 5000 மரங்களாக வளர்ந்து பசுமை போர்த்தியபடி இருக்கிறது. இதன் மூலம் நிலத்தில் வாழும் உயிரினங்கள் மற்றும் நீரிலும் அதிகப்படியான உயிரினங்கள் வாழ்கிறது.



அதேபோல, குளத்தின் நடுவில் நாட்டு கருவேல மரங்கள் அதிகளவு இருப்பதால் பெலிக்கன், பாம்புத்தாரா, நீர்காகம், வாத்து வகைகள் போன்ற பறவைகள் இங்கு கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்து முட்டை இடுகிறது. அதற்கு தேவையான உணவுகள் குளத்திலேயே கிடைப்பதால் வளம் மிக்க குளமாக மாறி இருக்கிறது. 100-150க்கு மேற்பட்ட பறவைகள் வருகின்றது. 45 -50க்கு மேற்பட்ட பட்டாம் பூச்சிகள் வாழ்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சுற்றி நாட்டு மரங்கள் அடையாளம் காணப்பட்டு, இங்கு நடவு செய்யப்பட்டு இருக்கிறது.

இக்குளத்தின் வாயிலாக 1400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்குளத்தை சுற்றிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டன. மாநகராட்சி நிர்வாகத்தோடு தன்னார்வலர்களும் களம் இறங்கி வேலை செய்ததின் பலனாக இன்று இயற்கை சூழ்நிலையாக மாறி இருக்கிறது.

வெள்ளலூரில் குப்பை கிடங்கு இருப்பதால் அதிகளவு மாசு ஏற்பட்டிருந்த நிலையில் இக்குளத்தின் மூலமாக நிறுவப்பட்ட மியாவாக்கி காடுகளினால் மாசுபாடு குறைய தொடங்கியுள்ளது. சாலை ஓரங்கள், சாலை விரிவாக்கம், பெரிய கட்டிடங்கள் அருகே உள்ள மரங்களை வெட்டுகிறார்கள். ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரம் நட வேண்டும் ஆனால், எங்களை பொறுத்துவரை 100 மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். 

மனிதனுக்கு முக்கிய தேவையாக இருப்பது நீரும், காற்றும் தான். அதற்காக இப்பல்லுயுரி சூழ் மண்டலம் அமைத்து உள்ளோம். எங்களை பொறுத்தவரையில் இந்த இடத்தை ஆக்சிஜன் தரும் தொழிற்சாலையாகத்தான் கருதுகிறேன். சிங்காநல்லூர் குளத்திற்கு அடுத்தப்படியாக இக்குளமும் பல்லுயிரி சூழ்நிலை மண்டலமாக விளங்கியுள்ளது. இதேபோல் கோவையில் உள்ள மற்ற குளங்களை சீரமைப்பதே எங்கள் இலட்சியம் என்று தெரிவித்தார். 

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...