நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று..! பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 277 ஆக உயர்வு!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில்‌ நேற்றைய தினம்‌ 258 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்‌ 6 நபர்களின்‌ பெயர்கள்‌ வெளிமாவட்ட மற்றும்‌ விமான நிலையப்‌ பட்டியலில்‌ சேர்க்கப்பட்டு, திருத்திய‌ பட்டியல்‌ 252-ஆக இன்று வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், இன்று 25 நபர்களுக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில்‌ மொத்தம் 277 நபர்களுக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்‌ 107 நபர்கள்‌ பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்‌. ஒருவர்‌ இறந்துள்ளார்‌. மீதமுள்ள 169 நபர்கள்‌ மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரியில் இன்று நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு:-

நோயாளி எண்‌.253, வயது 28, ஆண்‌, தாசப்பிரகாஷ் சாலை, உதகை நகராட்சி - இவர்‌ ஒட்டுநர்‌. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்‌. இவர்‌ பெயர்‌ செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றம்‌ செய்யப்படும்‌.

நோயாளி எண்‌.254, வயது 23, ஆண்‌, வள்ளலார்‌ நகர் ஒட்டுப்பட்டரை, குன்னூர்‌ நகராட்சி - இவர்‌ பணி நிமித்தமாக கோவை சென்று வந்துள்ளார்‌. இவர்‌ பெயர்‌ கோவை மாவட்டத்திற்கு மாற்றம்‌ செய்யப்படும்‌.

நோயாளி எண்‌.255 வயது 20, ஆண்‌, ஒசட்டி, குன்னூர் - இவர்களது சிகிச்சைக்காக குன்னூர் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்‌. அங்கு பரிசோதனை மேற்கொண்டதில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளி எண்‌.256 வயது 14, ஆண், காந்திபுரம், குன்னூர் - இவர்களது சிகிச்சைக்காக குன்னூர் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளார்‌. அங்கு பரிசோதனை மேற்கொண்டதில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளி எண்‌.257 வயது 36, ஆண்‌, விநாயகர்‌ கோயில் தெரு, குன்னூர் - இவர் அரசு மருத்துவமனை குன்னூர்‌ அருகில்‌ கடை வைத்துள்ளார்‌. பரிசோதனை மேற்கொண்டதில்‌ இவருக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோயாளி எண். 258 வயது 24, ஆண், ஆர்‌.சி.காம்பவுண்டு, குன்னூர் - இவர் அரசு மருத்துவமனை குன்னூர்‌ அருகில்‌ கடை வைத்துள்ளார்‌. பரிசோதனை மேற்கொண்டதில்‌ இவருக்கு நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோயாளி எண்‌:259 வயது 38, ஆண்‌, ஹேர்‌ வுட் குடியிருப்பு குன்னூர்‌ - இவருக்கு ஏற்கனவே கோத்தகிரி பகுதியில்‌ உள்ள தொற்றுடைய நபரின்‌ தொடர்புடையவர்.

நோயாளி எண்‌.260 வயது 28, ஆண்‌, பார்சைடு எஸ்டேட்‌, குன்னூர் - இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் குன்னூர்‌ மருத்துவமனையில்‌ மருத்துவப்‌ பரிசோதனையின்‌ போது தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோயாளி எண்‌.261 வயது 39, பெண்‌, ஒசட்டி, குன்னூர் - நோயாளி எண்‌.254-உடன்‌ தொடர்புடைய நபர்‌ ஆவார்‌.

நோயாளி எண்‌.262 வயது 10, பெண்‌, ஒட்டுப்பட்டரை, குன்னூர்- இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்‌ குன்னூர்‌ மருத்துவமனையில்‌ மருத்துவப்‌ பரிசோதனையின்‌ போது தொற்று உறுதி செய்யப்பட்டது.

நோயாளி எண்‌.263 வயது 49, கண்‌ப்பர்‌ சர்ச்‌ குனனூா - குன்னூர் மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வந்த நபருடன்‌ தொடர்புடைய நபர்‌.

நோயாளி எண். 264, வயது 26, ஆண்‌, டைகர்‌ ஹில் பெட ஃபோர்டு, குன்னூர் - இவர்‌ எம்‌.ஆர்‌.சி-யில்‌ எலக்ட்ரிக்கல்‌ ஒப்பந்ததாரர். 

நோயாளி எண்‌.265 வயது 59, ஆண்‌, டைகர்‌ ஹில் பெட ஃபோர்டு, குன்னூர் - இவர்‌ கோவை மாவட்டத்திற்கு சிகிச்சைக்காக சென்று வந்தவர்.

நோயாளி எண்‌.266 வயது 36, பெண்‌, கோடமலை எஸ்டேட்‌, வண்டிச்சோலை - இவர்‌, நோயாளி எண்‌.256-உடன்‌ தொடர்புடைய நபர். 

நோயாளி எண்‌.267 வயது 40, பெண்‌, காமராஜபுரம்‌, குன்னூர்- அன்னூரில்‌ ஒரு வாரம்‌ தங்கி, சிகிச்சை பெற்று வந்தவர்‌. சோதனைச்‌ சாவடியில்‌ பரிசோதனை மேற்கொண்டதில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டது. இவரது பெயர்‌ கோவை மாவட்டத்திற்கு மாற்றம்‌ செய்யப்படும்‌.

நோயாளி எண்‌.268, வயது 80, பெண்‌, தொரையட்டி. - இவர்‌ மேல்கவ்வட்டி பகுதியில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின்‌ உறவினர்‌.

நோயாளி எண்‌.269 வயது 39, பெண்‌, அபீசர்ஸ்‌ மெஸ்‌, வெலிங்டன் - இவர்‌ ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வரப்பெற்றவர்‌. இவரது பெயர்‌ விமான நிலைய பட்டியலில்‌ சேர்க்கப்படும்‌.

நோயாளி எண்‌.270 வயது 51, பெண்‌, ஜுப்லி கார்டன்‌, வெலிங்டன்‌.- இவர்‌ திருப்பத்தூர் பகுதியிலிருந்து வருகை புரிந்துள்ளார்‌. இவரது திருப்பத்தூர்‌ மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்படும்‌.

நோயாளி எண். 271 வயது 95, பெண்‌, காட்டேரி டேம்‌, அதிகரட்டி பேரூராட்சி- இவர்கள்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளருடைய குடியிருப்புக்கு அருகில் ‌வசிப்பவர்கள். 

நோயாளி எண்‌.272 வயது 50, ஆண்‌, காட்டேரி டேம்‌, அதிகரட்டி பேரூராட்சி- இவர்கள்‌ தனியார்‌ நிறுவனத்தில்‌ பணிபுரியும்‌. பணியாளருடைய குடியிருப்புக்கு அருகில்‌ வசிப்பவர்கள். 

நோயாளி எண்‌.273 வயது 85, ஆண்‌, அத்திக்கல், உதகை- தங்காடு, ஒரநள்ளி நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டவர்‌. 

நோயாளி எண்‌.274 வயது 70, பெண்‌, முட்டிநாடு ‌, அதிகரட்டி பேரூராட்சி - தங்காடு, ஒரநள்ளி நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டவர்.

நோயாளி எண்‌.275, வயது 67, பெண்‌ தங்காடு ஒரநள்ளி - தங்காடு, ஒரநள்ளி நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டவர். 

நோயாளி எண்‌.276, வயது 64 , ஆண்‌, அன்பு அண்ணா காலனி - இவர்‌ மருத்துவ சிகிச்சைக்காக வருகை புரிந்த நேரத்தில்‌ நோய்த்‌ தொற்று உறுதி செய்யப்பட்டது. 

நோயாளி எண்‌.277, வயது 58, ஆண்‌, பில்லிக்கம்பை- காரக்கொரையில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டவர்‌.

பொதுமக்கள்‌ அத்தியாவசிய மருத்துவத்‌ தேவைகளைத்‌ தவிர்த்து, வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌. எனவே, அனைத்து பொதுமக்களும்‌ இதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்‌ கொள்கிறேன். 

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...