திருப்பூரில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா; இன்று புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பின் எண்ணிக்கை குறைய தொடங்கிய நிலையில், இன்று மீண்டும் புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பின் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக உடுமலைப்பேட்டை, திருப்பூரில் உள்ள திருமூர்த்தி நகர், கொங்கு நகர், தென்னம் பாளையம், காங்கேயம், உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இன்று திருப்பூரில் புதிதாக 327 பேர் என மொத்தம் 2865 பேர் வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 157 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை நிறைவு செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

இதோடு, இன்று 732 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 152 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒருவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...