கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலி

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற வந்த 70 வயது மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற வந்த 70 வயது மூதாட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை, கோவை மாவட்டத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

இப்படியிருக்க கடந்த 11ஆம் தேதி கோவை கரும்புக்கடை சாரமேடு பிலால் நகர் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரோனா அறிகுறிகளுடன் எல்கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

இந்த நிலையில், திடீரென அவர் உடல்நிலை மோசமானதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்தும் பலனின்றி பரிதாபமாக இன்று பலியானார். இதைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய முன்வந்து கோவையில் உள்ள மயானத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...