கோவையில் யானைகளின் தொடர் இறப்பு குறித்த சந்தேகங்களும், பதில்களும்..!

கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையத்தில் யானைகளின் தொடர் மரணம் குறித்து சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

கோவை: கோவையில் யானைகளின் தொடர் மரணம் பற்றி பலருக்கு பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு சிலர் இது வனத்துறையின் அலட்சிய போக்கு என்கிறார்கள். யானை வழித்தடங்களில் தான் அதிக கவனம் கொண்டு சோதனை செய்ய வேண்டும். குறிப்பாக அதன் வலசை செல்லும் பாதைகள், பிறப்பு, இறப்பு மற்றும் வேட்டை சம்பவங்கள் தான் அதிகம் இருக்கும். இவற்றை கவனிக்க வனத்துறையில் போதுமான அளவு பணியாட்கள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்த கேள்விகளை சூழலியியல் செயற்பாட்டாளர் மோகன்ராஜ் அவர்களிடத்தில் வைத்தோம்.

1.வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்களே அது உண்மையான தகவல் தானா?

வனத்துறையின் ஆட்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல். 80, 90களில் தான் பற்றாக்குறை இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இப்பொழுது அந்த காடுகளை பற்றி நன்கு தெரிந்த மற்றும் வனவிலங்குகளை கையாளக்கூடிய அந்த வனப்பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் வேட்டை தடுப்பு காவலர்களாக பயிற்சி அளிக்கப்பட்டு பணிபுரிகின்றனர். அது மட்டுமல்லாமல் ஒரு பகுதியில் அதிகாரி வரவில்லை என்றால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப வேற ஆட்கள் நியமிக்கப்படுவார்கள்.

2.யானைகள் உடற்கூறாய்வில் பல குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள் அது பற்றி?

யானையோ அல்லது மற்ற வனவிலங்குகளோ இறந்தவுடன் உடற்கூறாய்வு செய்யப்படுகிறது. ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இறந்த 13 யானைகளில் இயற்கை மரணம், நோய்வாய்ப்பட்டு இறத்தல், யானைகளுக்குள் சண்டை, வயது மூப்பு என பல காரணங்கள் சொல்லி அறிக்கையை தயார் செய்து இருக்கிறார்கள்.

அதில் வேட்டைக்காக சில யானைகளுக்கு விஷம் வைத்து இருக்கலாம். சுடப்பட்டு இருக்கலாம் அல்லது நோய் வந்து இறந்து இருக்கலாம் என பல கேள்விகள் உண்டு. உடற்கூறாய்வு செய்து சோதனைக்காக உடலுறுப்புகளை ஆய்வகத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று கூறும் வனத்துறை இதுவரை ரிசல்ட் பற்றி வெளியிடவில்லை. மேலும் உடற்கூறாய்வில் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறை, மருத்துவர்கள், தன்னார்வ அமைப்புகள், நிருபர்கள் இருந்தால் மட்டுமே உண்மையான தகவல்கள் வெளிவரும்.

3.யானைகள் இறப்பிற்கு முக்கிய காரணம் அதன் வாழ்விடம் அழிப்புதான் முக்கிய காரணமாக இருக்கிறது. எப்படி அவற்றை மீட்க இயலும் ?

யானைகளை பொறுத்துவரை உணவுக்காக ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு செல்வது தான் வழக்கம். அப்படி செல்லும் போது அவற்றின் வழித்தடத்தில் இடையூறுகள் இல்லாமல் இருந்தால் எந்தவித பிரச்சனை இல்லை. ஆனால், கோவையில் இடையூறுகள் இருப்பதனால் தான் 13 யானைகள் இறப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.

யானைகளுக்காகச் செய்த அத்தனை முயற்சியும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. தோராயமாக 200 முதல் 250 கிலோ வரையிலான உணவை உட்கொள்கிறது. அதன் மூலம் வெளியேறும் கழிவுகளில் 10 சதவீத விதைகள் ஒரு காட்டையே உருவாக்க கூடியவை. அந்த காட்டையே விவசாய நிலங்களாக மாற்றி விவசாயம் செய்கிறார்கள். உணவுக்காக வெளியே வரும் போது பட்டாசு ,கல், ஜேசிபி போன்றவற்றின் மூலம் விரட்டுகிறார்கள். இதற்கு எல்லாம் ஒரே வழி அவற்றின் வாழ்விடங்களை மீட்டு எடுப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து வழித்தடங்களை காப்பாற்றுவதும் தான் முக்கிய கடமையாகும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...