கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இதுவரை ரூ.14.46 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் விதமாக கோவை மாவட்டம் முழுவதும் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் தலா ரூ.100 அபராதமாக வசூலிக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவின்படி மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அடங்கிய 20 பறக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டு, முகக்கவசங்கள் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, இதுவரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.14.46 லட்சம் வரை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 248 கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு விதிமுறைகளை மீறியதாக 27 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அதே போல் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இதுவரை ரூ.14.46 லட்சம் வரை அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.