கோவை: பொள்ளாச்சியில் 8ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர், மகளுடன் விளையாட வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்பா என இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் பகுதியில் பாபு என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத விநாயகர் கோயிலில் ரகசிய தாலி கட்டி பெண்ணை பெண்ணின் வீட்டிற்கு அனுப்பி விட்டு அவ்வப்போது யாரும் இல்லாத நேரத்த்தில் பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து கர்ப்பமாக்கியுள்ளார்.
சமீபத்தில், மாணவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர் தாயார், மகளிடம் விசாரித்த போது பாபு என்ற இளைஞர் தன்னை கட்டாயபடுத்தி ரகசிய திருமணம் செய்ததாகவும், யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் இச்சைக்கு ஆளாக்கியதால் தான் தற்போது கர்ப்பமடைந்தள்ளதாக கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த தாயார், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை விசாரித்த போலீசார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதேபோல், பொள்ளாச்சியை அடுத்த சின்னவதம் பச்சேரியில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாட சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த குழந்தையின் தந்தை ராஜா பக்கத்து வீட்டு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதை தன்னுடைய அம்மாவிடம் மாணவி கூறியதை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.