திருப்பூர்: சமூக வலைத்தளங்களில் இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர், இந்து கடவுள் படம் மற்றும் வேலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: சமூக வலைத்தளங்களில் இந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணியினர், இந்து கடவுள் படம் மற்றும் வேலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சமூக வலைத்தளங்களில், கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், இந்து தெய்வங்களையும், வழிபாட்டு முறைகள் மற்றும் புனித நூல்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாச வார்த்தைகளைக் கொண்டு வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.
பிறரின் மனதைப் புண்படுத்தும் விதமாக கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனல் இது போன்ற இந்து நம்பிக்கையை மற்றும் கடவுள்களை கேலி செய்து வருவதால், அந்த சேனலை தடை செய்யவும், அந்த வீடியோவை பதிவேற்றம் செய்த நபரை உடனடியாக கைது செய்ய கோரியும், இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.