ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் நிலைய வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் நிலைய வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கத்தை நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய குழு அறைகூவல் விடுத்து இருந்தது.



இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் 20கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...