கோவை: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இதனிடையே இன்று முதல் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்ட பின்னர், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பையோடு சேர்த்து வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.