கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணிக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை செய்யப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணிக்கு கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை செய்யப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் இன்று வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொரொனா பாதிப்புள்ள உள்ள பகுதிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வந்தார். 

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் அவருடன் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகளும் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் தற்போது அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பயன்படுத்திய அறை மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவை மூடப்பட்டது. 

ஆட்சியரின் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளுக்கும் கொரொனா பரிசோதனையானது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்குள் வரும் நபர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரசோதனையானது நடத்தப்பட்ட, பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...