திருப்பூரில் சாலைகளில் நாற்று நட்டு; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் இன்று நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சாலையில் இன்று நாத்து நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது எனவும், குறிப்பாக வீரபாண்டி பகுதி, திருப்பூர்_தாராபுரம் சாலை மற்றும் திருப்பூர்-பல்லடம் சாலையை இணைக்கும் முக்கிய சாலைகள் மிகுந்த மோசமான நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். 

இந்த சாலையில் பல்வேறு இடங்களில் குழியாக இருப்பதோடு சாலைகள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரியும்படி உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கி விடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர், என குற்றம் சாட்டினர். 

எனவே, குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல உயிர்களை காவு வாங்கும் மோசமான சாலையை உடனடியாக சரி செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...