கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதியானவர்கள் விருப்பப்பட்டால் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு.!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதியானவர்கள் விருப்பப்பட்டால் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதியானவர்கள் விருப்பப்பட்டால் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது வீரியமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை கொடுக்க தமிழக அரசு பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறது. 

இப்படியிருக்க கோவை மாவட்டத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.

இந்த சிகிச்சைக்காக தற்போது பாதிக்கப்பட்ட 25 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சிகிச்சையானது கோவை கொடிசியா கொரோனா கண்காணிப்பு மையத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ள நிலையில் கோவையிலும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான, பிரத்யேக ஏற்பாடுகள் கொடிசியா வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, ஆராய்ச்சி முறையில் துவங்கும் இந்த சிகிச்சை குறித்த அனைத்து குறிப்புகளும் சேகரிக்கப்பட்டு உடல் இயக்க மாற்றம் எப்படி உள்ளது என்ற விபரங்கள் கண்காணிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சிகிச்சை முடிவுகள் பொறுத்து, சித்த மருத்துவ முறை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சித்த மருத்துவ அலுவலர் தனம் கூறும்போது:-

கோவை கொடிசியா மையத்தில் சித்தமருத்துவ சிகிச்சைக்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இன்று நோயாளிகளை சந்தித்து உடல்நிலை குறித்து தகவல் சேகரிக்கப்படும். முதற்கட்டமாக விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கபடும், என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...