முகநூலில் பொய்யான செய்திகளை பரப்பி வரும் அதிமுக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எம்எல்ஏ நா.கார்த்திக், மாநகர காவல் ஆணையரிடம் மனு

கோவை: முகநூலில் இழிவாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வரும் அதிமுக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று, மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை: முகநூலில் இழிவாகவும் பொய்யான செய்திகளை பரப்பி வரும் அதிமுக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று, மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

அதிமுக நபர் ஒருவர் தனது அவர் முகநூல் பக்கத்தில் திமுக மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் திமுகவினரை தவறாக சித்தரித்து பதிவு வெளியிட்டதாக, மனுவில் தெரிவித்துள்ளார்.



மேலும், அதிமுகவினர் வேண்டும் என்றே இதுபோன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வருவதாகவும், இதுபோன்று செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர், சுமித் சரண் அவரிடம் மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து எம்எல்ஏ நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில்:

கோவையில் அதிமுக அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளின் ஊழல்கள், முறைகேடுகள், தொடர்பாக திமுக சார்பில் அறிக்கையாகவும், செய்தியாகவும் வெளியிட்டு வருவதாகவும், அதற்கு பதில் கூற முடியாமல் திமுக நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கில் வேண்டும் என்றே பொய் வழக்குகளை அதிமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு போட்டு திமுகவினரை அச்சுறுத்துவதற்காக சிறையில் அடைக்கின்றனர்.

அதிமுக நபர் ஒருவர் தன்னையும் திமுக நிர்வாகிகளையும் கீழ்தரமாக பதிவு வெளியிட்டுள்ளதாகவும், அநாகரீகமாக முகநூலில் வெளியிட்டுள்ள இந்த அதிமுக நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல்துறை ஆணையாளரிடத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...